தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இந்த காற்றழுத்தம் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.