அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்...

சென்னை பெருங்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், அலுவலகம் செல்லுவோர், தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2018-12-04 22:22 GMT
பெருங்குடி பகுதியில் ஐ.டி. உள்ளிட்ட ஏராளமான தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சட்டக்கல்லூரி ஆகியவை உள்ளன. இங்குள்ள எம்.ஜி.ஆர் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதால்,  இதற்கு தீர்வு காணுமாறு, அந்த பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்