புதிதாக அமைக்கப்பட்ட இணைப்பு பாலத்தை, முறைப்படி திறந்து வைக்குமாறு கோரிக்கை
கன்னியாகுமரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 வழி சாலையில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கன்னியாகுமரியில் 4 வழி சாலை திட்டப்பணிகளின் ஒரு அங்கமாக, நரிகுளம் என்ற இடத்தில், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. 21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலம், சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதனால், 15 கிலோ மீட்டராக இருந்த பயண தூரம் அரை கிலோ மீட்டராக குறைந்தது. இந்நிலையில், சாலையின் குறுக்கே மீண்டும் மணல் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக இந்த சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.