நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... உதவிக்கரம் நீட்டிய கடலோர காவல்படை..
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மண்டபம் பகுதியில் இருந்து வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 5 பேர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு திடீரென மூழ்கியது. இதனால் அவர்கள் கடலில் தத்தளித்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.