தனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-14 06:16 GMT
கடமலைக்குண்டு என்ற இடத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், தங்க வணங்காமுடி என்பவர் ,போலியாக மருத்துவம் பார்ப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற, துணை ஆட்சியர் தினேஷ்குமார், அங்கு அதிரடி சோதனை நடத்தினார். அப்போது மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் ஏதுமின்றி, தங்க.வணங்காமுடி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், மருத்துவமனையில் இருந்த காலாவதியான மருந்துகள், தடை செய்யப்பட்ட கருத்தடை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
10 ஆண்டுகளாக இயங்கி வந்த மருத்துவமனையில், சிகிச்சை அளித்து வந்தவர் போலி டாக்டர் என்பது அப்பகுதி மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்