மதுராந்தகத்தில் தீபாவளி சீட் நடத்தி ரூ. 2 கோடி மோசடி : பாதிக்கப்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சங்கர் கடந்த 4 ஆண்டுகளாக கந்த சுவாமி என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.
மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சங்கர் கடந்த 4 ஆண்டுகளாக கந்த சுவாமி என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். 3 வகையான மாதாந்திர தீபாவளி சீட்டு நடத்தி வந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்பு வழங்க வேண்டிய தங்க நகை வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சங்கர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மதுராந்தகத்தில் உள்ள சங்கர் வீட்டை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.