மீன் பிடி படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் : மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்​ஸ்பான்டர்களை, மானியத்தில் வழங்குவது குறித்து, முடிவெடுக்க தமிழக மீன்வளத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-04 06:59 GMT
கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து  கொள்ள ஏதுவாக இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்​ஸ்பான்டர்களை, மானியத்தில் வழங்குவது குறித்து, முடிவெடுக்க தமிழக மீன்வளத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் குறித்த வழக்கு, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, முன்பு மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த டிரான்ஸ்பான்டர்கள் தயாரிக்க ஆகும் செலவு குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ராமமுரளி அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், ஒரு டிரான்ஸ்பாண்டர் கருவியை உற்பத்தி செய்ய 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த கருவிகளுக்கு மானியம் வழங்குவது குறித்து நிதித்துறை செயலாளருடன் கலந்தாலோசித்து தெளிவான முடிவெடுக்கும்படி தமிழக மீன்வளத் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்