ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் : பொதுமக்களே வெளியேற்றும் அவலம்

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சொந்த செலவில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

Update: 2018-10-28 12:06 GMT
விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை, பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக  மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டு ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து வருகின்றனர். இதில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் சொந்த செலவில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்