ஓமலூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆய்வு
தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சதாசிவம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சதாசிவம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் வளாகத்தில் இருந்த பழைய கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டார். கிராம சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்றுதண்ணீரில் கொசு புழு இருப்பதை கண்டறிந்து பணிகளை தீவிரபடுத்தி வருகின்றனர். ஓமலூர் வட்டார கிராமங்களில் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஓமலூர் அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து தந்தி டிவியில் நேற்று செய்தி வெளியானது இதன் எதிரொலியாக பொது சுகாதரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனையில் ஆய்வுகள் செய்தார். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சதாசிவம் தெரிவித்தார்.