பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-10-26 08:05 GMT
* தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணத்தில், 60 சென்ட் பரப்பளவில், ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பில், சிவந்தி ஆதித்தனாருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

* இந்த மணிமண்டபத்திற்கு, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாலைமலர் இயக்குநர் சிவந்தி ஆதித்தன், அவரது சகோதரர் ஆதவன் ஆதித்தன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  


6 மாதத்திற்குள் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க 1 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 6 மாதத்திற்குள் மணிமண்டப பணிகளை முடிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்