சென்னையில் பார்க்கிங் பிரச்சினை : சமாளிக்க மொபைல் ஆப்

சென்னையில் நிலவும், வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் பிரச்சினையை சமாளிக்க புதிய Mobile app ஒன்று அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

Update: 2018-10-17 07:42 GMT
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், வாகனங்களை நிறுத்துவதில் பிரச்சினை நிலவுகிறது. சாலையோரங்களிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு, பார்க்கிங் செய்ய இடம் கிடைப்பதில்லை என பல்வேறு கடைகளின் உரிமையாளர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பார்க்கிங் பிரச்சினையை போக்க, மொபைல் app ஒன்றை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆப் மூலம், எங்கெங்கு இடம் காலியாக உள்ளது என்பதை அறியலாம். ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த app-ல் வசதி உள்ளது. முதல்கட்டமாக அண்ணா நகர், மெரினா கடற்கரை, 

பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த app, சோதனை முயற்சியில் பயன்பாட்டிற்கு வருகிறது. அந்தப் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், parking app-ன் பயன்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்