குரங்கிற்கு மற்றொரு குரங்கு பேன் பார்க்கும் சிற்பத்தை அதிசயமாக பார்த்து செல்லும் குரங்கு...
குரங்கு சிற்பத்தை, தினந்தோறும் அதிசயமாக பார்த்து செல்லும் குரங்கின் புகைப்படம் சமுக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
குரங்கு சிற்பத்தை, தினந்தோறும் அதிசயமாக பார்த்து செல்லும் குரங்கின் புகைப்படம் சமுக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான குடைவரை கோயில்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அர்ச்சுணன் தபசு அருகில் குரங்கிற்கு குரங்கு பேன் பார்க்கும் சிற்பம் உள்ளது. இதனை குரங்கொன்று தினந்தோறும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளது.