தடை நீக்க கோரும் மனுக்களை 2 வாரங்களுக்குள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் - உயர் நீதிமன்றம்
தடை நீக்க கோரும் மனுக்களை 2 வாரங்களுக்குள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்ற நடைமுறையை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை நீக்க கோரும் மனுக்களை 2 வாரங்களுக்குள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்ற நடைமுறையை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்துக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் மறுப்பதாக ரவி ரெட்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 1965-ம் ஆண்டு விதிப்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.