இசைப்பள்ளியை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்

அரசு இசைப்பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

Update: 2018-09-20 10:09 GMT
* ப்ளஸ் 2 முடித்தவுடன் அடுத்து என்ன என்ற கேள்வி எழுவது இயல்பு தான். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து பொறியியல், மருத்துவம் சேரும் மாணவர்களை பார்த்திருப்போம். 

* ஆனால் வருடாந்திர கல்வி கட்டணம் இன்றி, ஊக்கத்தொகையையும் மாணவர்களுக்கு வழங்கி கூடவே அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தருகிறது இசைப் படிப்புகள். 

* தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் இந்த அரசுப் பள்ளிகள் கலையின் மீது தீராத காதல் கொண்டவர்களுக்கு ஏற்ற இடம்.

* வாய்ப்பாட்டில் உங்களுக்கு விருப்பம் என்றால் அதிலும் நீங்கள் சாதிக்கலாம்... பரதத்தில் விருப்பம் உடையவரா? அதையும் நீங்கள் முறைப்படி கற்று உங்கள் இலக்கை எட்ட முடியும்.

* இசை, நடனம் மட்டுமின்றி இசைக்கருவிகள் வாசிக்கவும் மாணவர்களுக்கு போதிய பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகிறது. 
 
* ஆண்டு கால பயிற்சியை நிறைவு செய்து வெளியே வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகம் காத்திருக்கிறது என்கிறார் சேலம் அரசு இசைப் பள்ளியின் முதல்வர் சங்கரராமன்.

* இசைப் படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு வேலை வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்