கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்
வட மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கான பணிகளை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
வட மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி பகுதியில் சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்கப்பட உள்ளது. 2 ஆயிரத்து 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்த திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகளை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்ட பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, சென்னை - தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அம்மாவட்டத்தின் அரசு துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் குறித்தும், இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.