எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2018-08-17 06:16 GMT
எய்ம்ஸ் மருத்துவர்களான நுரையீரல் மருத்துவர் ஜி.சி. கில்னானி, மயக்கவியல் மருத்துவர் அஞ்சன்டிரிகா, இதயநோய் சிகிச்சை மருத்துவர் நிதீஷ்நாயக் ஆகிய மூவரும் வரும் 23 மற்றும் 24ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, 20 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவர்கள் அருள்செல்வன், ரவிக்குமார் ஆகியோரும், 21ம் தேதி அப்பல்லோ மயக்கவியல் மருத்துவர் பாஸ்கர், சிசியூ பிரிவு மருத்துவர் செந்தில் குமார் ஆகியோரும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 24ம் தேதி அப்பல்லோ மருத்துவமனை அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்