அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக இரண்டாயிரத்து 582 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக இரண்டாயிரத்து 222 பணியிடங்கள் நிரப்பப்படும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. தற்போது கூடுதலாக 360 இடங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் இரண்டாயிரத்து 582 பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 7-ல் நடைபெறவுள்ளது.