12th ரிசல்ட் பார்த்த மாணவர்கள் கவனத்திற்கு... "இன்று முதல்" - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்ட செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் 11 ஆம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும் எனவும் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. நகல் பெறும் மாணவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண்கள் குறைய நேர்ந்தால், அந்த மதிப்பெண்களே இறுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.