ரிசல்ட்டுக்கு பின் புது சிக்கல்.. குழம்பி தவிக்கும் +2 மாணவர்கள்.. எமிஸ் நம்பர்னா என்ன?
ரிசல்ட்டுக்கு பின் புது சிக்கல்.. குழம்பி தவிக்கும் +2 மாணவர்கள்.. எமிஸ் நம்பர்னா என்ன?
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்கும் போது , எமிஸ் எண் கேட்பதால் அந்த விவரம் தெரியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர். எமிஸ் எண்களைக் கொண்டே ஒரு மாணவர் எந்தெந்த பள்ளிக்கு மாறி இருக்கிறார், எங்கெங்கே படித்திருக்கிறார் என்ற முழுமையான விவரங்கள் தெரியவரும். முழுக்க முழுக்க கல்வித்துறை நிர்வாகம் சார்ந்து மட்டுமே இந்த எண் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது உயர்கல்வி சேர்க்கை துவங்கி உள்ள நிலையில், விண்ணப்பத்தில் எமிஸ் எண் கேட்பதால், மதிப்பெண் பட்டியலிலேயே மாணவர்களுடைய எமிஸ் எண்களை பதிவிட்டால், இது போன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்க்கலாம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.