கர்நாடகவில் கலவர வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், குவைத்தில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பிரசாந்த் என்ற பயணிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதும், கர்நாடக கலவர வழக்கிலும் மகளிர் போலீசாரை தாக்கிய வழக்கிலும், 12 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பிரசாந்த்தை பிடித்த குடியுரிமை அதிகாரிகள் அவரை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர், கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.