15 ஆண்டுகளில் 11 யானைகள்.. - வனத்துறையின் ஸ்மார்ட் மூவ் - `ஜுராசிக் பார்க்' லெவல் யோசனை

Update: 2023-11-02 12:22 GMT

கோவை மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரையிலான வனப்பகுதி வழியாக 2 இரயில் பாதைகள் செல்கின்றன. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்தில் இருந்து வெளியேறி ரயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன. இதைத் தடுக்க யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு

சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும் போது அவற்றை படம்பிடிப்பதுடன், யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை மற்றும் ரயில்வே துறைக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், சைரன் மூலம் எச்சரிக்கை வழங்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மதுக்கரை வனப்பகுதியில் உள்ள இரு ரயில் பாதைகளில் 12 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை அடிப்படையில் கண்காணிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தெர்மல் இமேஜிங் அம்சத்துடன் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்