அமெரிக்காவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், ரசிகர் ஒருவரை தாக்க முயன்ற சம்பவம் அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ராஃபிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹாரிஸ் ராஃப் ரசிகரை தாக்க ஓடினார். ஹாரிஸ் ராஃபை அவரது மனைவி தடுத்து நிறுத்திய நிலையில் இது தொடர்பான காட்சி வைரலாகி வருகிறது.