இங்கிலாந்து அணியை ஓடவிட்ட இந்திய மகளிர் அணி

Update: 2023-07-30 04:36 GMT

ஸ்பெயின் ஹாக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு விழா தொடரில், இந்திய மகளிர் அணி தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில், பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்பெயின் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்