ஆசிய ஐவர் ஹாக்கி.. ஜப்பானை திணறவிட்ட இந்தியா - கோல் மழை பொழிந்த வீரர்கள் - இமாலய வெற்றி

Update: 2023-09-01 03:48 GMT

ஓமனில் நடைபெற்றுவரும் ஆசிய ஐவர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் லீக் போட்டியில் ஜப்பானை இந்தியா பந்தாடியது. சலாலா நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் கோல் மழைபொழிந்தனர். ஆட்டத்தின் பாதி நேர முடிவில் 18க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2வது பாதி ஆட்டத்திலும் அதிரடியாக ஆடி ஜப்பானை திணறவைத்தது. 2வது பாதி ஆட்டத்தில் மேலும் 17 கோல்களை இந்தியா போட்ட நிலையில், ஜப்பான் ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. ஒரு தரப்பாக முடிந்த ஆட்ட நேர முடிவில் 35க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்