ஒலிம்பிக் கிராமத்தில் மது அருந்திய வீரர்கள் - டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கண்டனம்
ஒலிம்பிக் கிராமத்தில் மது அருந்திய வீரர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த வாரம் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பூங்காவில் வீரர்கள் சிலர், கொரோனா விதிமுறைகளை மீறி மது அருந்தினர். இந்த சம்பவம் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வீரர்களை கண்டித்து இருப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது என வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கூறி உள்ளது.