இந்திய ஹாக்கி அணி மீதான நம்பிக்கை அதிகரிப்பு - காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தியது

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Update: 2021-08-02 03:10 GMT
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணியை 3க்கு, ஒன்று(3-1) என்ற கோல் கணக்கில் விழ்த்தியது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்