ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிபோகுமா? - ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கி - ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்..