நெதர்லாந்து : இனவெறியால் ஒத்திவைக்கப்பட்ட கால்பந்து போட்டி
நெதர்லாந்தின் டச்சு எரெடிவைசி கால்பந்து தொடரில் கடந்தவாரம் டென்போச் - எக்செல்சியர் ரோட்டர்டாம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின்போது, ரசிகர்கள் இனவெறியுடன் கூச்சல் எழுப்பியதால், 10 நிமிடங்கள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
நெதர்லாந்தின் டச்சு எரெடிவைசி கால்பந்து தொடரில் கடந்தவாரம் டென்போச் - எக்செல்சியர் ரோட்டர்டாம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின்போது, ரசிகர்கள் இனவெறியுடன் கூச்சல் எழுப்பியதால், 10 நிமிடங்கள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இனவெறி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற லீக் போட்டியின்போது இரு அணி வீரர்களும் போட்டி தொடங்கிய முதல் ஒரு நிமிடம் களத்தில் மவுனமாக நின்று, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், வீரர்கள், ரசிகர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் கைகளை தட்டியவாறு, "இனவெறி இருந்தால், நாங்கள் விளையாட மாட்டோம்" என்றும் கோஷமிட்டனர்.