ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்கா - இந்திய அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி,50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக மோரிஸ் 42 ரன்களும்,டூ ப்ளெஸிஸ் 38 ரன்களும் எடுத்தனர்.இந்திய தரப்பில் சகல் நான்கு விக்கெட்டுகளும்,பும்ரா,புவனேஷ்வர் குமார் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து விளையாடிய இந்தியா தவான்,கோலி விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.மறு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.