ராஜஸ்தானின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜா வயநாடு நிலச்சரிவை பசு வதைதோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது... உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் இந்த அளவிலான பேரழிவை ஏற்படுத்தாது என்று தெரிவித்த அவர், 2018 முதல், பசு வதையில் ஈடுபடும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதாகவும், பசு வதையை நிறுத்தாவிட்டால் இதுபோன்ற அவலங்கள் தொடரும் எனவும் அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...