வயநாடு பேரழிவு.. கனத்த இதயத்துடன் பேசிய சோனியா காந்தி

Update: 2024-07-31 10:32 GMT

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில்

உரையாற்றிய சோனியா காந்தி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் பாஜக அரசுக்கு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். வயநாடு பேரழிவின் அளவு திகைக்க வைப்பதாகவும், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.இயற்கை சீற்றங்கள் மட்டுமின்றி, தவறான நிர்வாகத்தால் ஏற்படும் ரயில் விபத்துகளிலும் உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.பல முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய

பணிகளுக்கு பட்ஜெட்டில் நியாயம் வழங்கவில்லை

என தெரிவித்தார்.2021இல் நடைபெற இருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது என குறிப்பிட்டார்.மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த உத்வேகத்தையும் நல்லெண்ணத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்