``துணை முதல்வர் உத்தரவிட்டும்... நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்...'' - டேக் செய்த இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-11-17 12:36 GMT

துணை முதல்வர் உத்தரவிட்டும், மழைநீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சிக்குட்பட்ட கஸ்பாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த மாதம் துணை முதல்வர் உதயநிதியை டேக் செய்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார். அதில், தங்கள் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதனைப் பார்த்த துணை முதல்வர் உதயநிதி, அடுத்த நாளே கஸ்பாபுரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அப்பகுதியில் இரண்டு சிறு கால்வாய்களை அமைத்து, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும், அந்த பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதால், வழக்கம் போல மழை நீர் தேங்குவதாக விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்