விஜய் ஏற்றும் கொடியை, 5 ஆண்டுகளுக்கு தாங்க இருக்கும் கம்பம் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாளின் படங்களும் திடலில் அமைப்பு
விஜய்யின் சினிமா என்ட்ரிக்கு கொடுக்கும் வரவேற்பை மிஞ்சும் அளவுக்கு, அவரின் அரசியல் என்ட்ரிக்கு உழைத்து வருகின்றனர் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும்...
உச்சகட்ட வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தவெக மாநாட்டுக்கான பணிகள்...
20 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட கொடியை விஜய் ஏற்றி பறக்க விட இருக்கும் நிலையில், அந்த கொடியை தாங்கி பிடிக்க இருக்கும் கொடிக்கம்பத்தை 5 ஆண்டுகளுக்கு அகற்ற முடியாதபடி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது...
இந்நிலையில், அந்த கொடிக்கம்பம் துருப்பிடிக்காத வகையில் தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்..
மேலும், எளிதில் அசைக்க முடியாத வகையில் கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விதிகளின் படி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் கம்பத்தை அமைத்து கொடுத்த கார்த்திகேயன்...
கொடிக்கம்பம் அமைத்த நிறுவனம்
"கொடிக்கம்பம் துருப்பிடிக்காமல் நீடித்து நிலைக்கும்"
"கம்பத்தின் உச்சத்தில் இடிதாங்கி அமைக்கப்பட்டிருக்கிறது"
"மோட்டார் மூலம் கொடியேற்றினால், கொடி மேலே செல்ல 15 நிமிடமாகும்"
இதற்கிடையே மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உருவப்படங்களுடன் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் மற்றும் தமிழன்னை படத்துடன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படமும் இடம் பெற்றிருப்பது மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது...