100 ஆண்டுகளாக தீராத சிக்கல்.. தவித்து போன மக்கள்.. ஊராட்சி தலைவரின் நெகிழ்ச்சி செயல்

Update: 2024-08-25 13:48 GMT

100 ஆண்டுகளாக தீராத சிக்கல்.. தவித்து போன மக்கள்.. ஊராட்சி தலைவரின் நெகிழ்ச்சி செயல்

வாணியம்பாடி அருகே 100 ஆண்டுகளாக இடுகாடு இல்லாத கிராமத்திற்கு சொந்த செலவில் ஊராட்சி மன்ற தலைவர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் குட்டூர் கிராமத்தில் இடுகாடு இல்லாததால், ஊர் மக்கள் தனியார் நிலத்தில் சடலங்களை அடக்கம் செய்து வந்தனர். கடந்த ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய முயன்ற போது நில உரிமையாளர் மணிவண்ணன் எதிர்ப்பு தெரிவித்தது சர்ச்சையானது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்வான அருணா குப்புசாமி இடுகாடு அமைக்கும் முயற்சியில் இறங்கினார். பின்னர் கிராமத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில், மணிவண்ணன் நிலத்தை விலைக்கு தர ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து நிலத்தை வாங்கி கிராம மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்