ஜோ பைடன் இல்லத்தில் பிரதமர் மோடி - உலகையே திரும்ப வைத்த வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-22 09:46 GMT

ஜோ பைடன் இல்லத்தில் பிரதமர் மோடி - சந்திப்புக்கு பின் உலகையே திரும்ப வைத்த வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க ஜோ பைடன் கூறியதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குவாட் மாநாட்டிற்கிடையே, அதிபர் ஜோ பைடனை, Greenville பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், அதிபர் அழைப்பின்பேரில் சென்றார். அப்போது ​மோடியை பைடன் உற்சாகத்துடன் வரவேற்றார். இச்சந்திப்பின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இருநா​ட்டு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அதிபருடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, தனது இல்லத்திற்கு அழைத்து வரவேற்ற அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தங்களது பேச்சுவார்த்தை பலனளிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தோ-பசிபிக் உட்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தியாவுடனான நட்பு வலுவடைந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு ​மேம்பட்டுள்ளதாகவும், அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதனிடையே, சீர்திருத்தம் செய்யப்பட உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜோ பைடன் பகிர்ந்துகொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்