வேலூரில் வருகிற 17-ந்தேதி தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து காட்பாடி செல்கிறார்.16 -ம் தேதி மாலை 6 மணியளவில் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வி.ஐ.பி. சலூன் பெட்டியில் (VIP SALOON COACH ) பயணம் மேற்கொள்கிறார். முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பின் 17 ஆம் தேதி இரவு மீண்டும் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.