நாளை தான் கடைசி... செந்தில் பாலாஜியிடம் 100 கேள்விகள்?" - ED காட்டும் அதிரடி

Update: 2023-08-11 13:51 GMT

கஸ்டடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை சிறையில் ஒப்படைக்க வேண்டியுள்ளதால் அமலாக்கத்துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறை அதிகாரிகள், ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஸ்டடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை சிறையில் ஒப்படைக்க வேண்டியுள்ளதால் அமலாக்கத்துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என அமலாக்கத்துறையினர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கரூரில் கட்டப்பட்டு வந்த வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். விசாரணையில் 30கோடி மதிப்பிலான இந்த வீட்டை 10 லட்சத்திற்கு வாங்கி இருக்கும் நிலையில் அது குறித்தும் அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்