இன்றைய தலைப்பு செய்திகள் (08-08-2023) | 9 PM Headlines

Update: 2023-08-08 15:48 GMT

நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று காரசார விவாதம்....

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌன விரதத்தை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்...

பிரதமர் மோடி தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு..

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசார விவாதம்

எதிர்க்கட்சிகள் இடையே அவநம்பிக்கை - பிரதமர் விமர்சனம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் பரஸ்பர அவநம்பிக்கையால், இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.. இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் ரமேஷ்குமார்...

ரமேஷ்குமார், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் எவ்வளவு மணி நேரம் நடைபெற்றது? ஆளும் பாஜக தரப்பு இதை எப்படி எதிர்கொள்கிறது? விவரங்களை சொல்லுங்க...

செந்தில் பாலாஜி வழக்கு - 2 மாதங்கள் அவகாசம்

செப்.30க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

போக்குவரத்துத்துறை மோசடி புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புலன் விசாரணையை நிறைவு செய்ய, 2 மாதங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் செப்டம்பர் 30க்குள் மத்திய குற்றப்பிரிவு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர். செய்தியாளர் வெங்கடேசன் வழங்கிய தகவல்கள் இவை...

செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக விசாரணை

அடுத்தடுத்து 50 கேள்விகள் - அமலாக்கத்துறை

சென்னையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. நாளொன்றுக்கு செந்தில் பாலாஜியிடம் 50 கேள்வி என மொத்தம் 200 கேள்விகளை கேட்டு, தகவல்களை பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்கள் ரமேஷ், சமயமணிவண்ணன் வழங்கிய தகவல்கள் இவை..

உங்கள் நகம் என்ன நிறம்?

விரல் நகங்களை வைத்தே நோய் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்