காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-25 00:54 GMT
  • வடமேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.... தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கை....
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த மழை... திருவண்ணாமலை, திருத்தணி உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது... 
  • காஞ்சிபுரத்தில் கொள்கை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக பவள விழாவை கொண்டாடுவோம்... தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு...
  • நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற முதல் காரணம் பிரதமர் மோடிதான்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...
  • ஜம்மு காஷ்மீரில் 26 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்...
  • தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்கக் கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு... மீறி கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
  • அப்துல் கலாம் நினைவிடத்திற்கு நிலம் ஒதுக்கி, 2016ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை... மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு...
  • சென்னையில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதிர்ச்சி... சென்னை விமான நிலையத்தில், எரிபொருள் நிரப்பும்போது பரபரப்பு...
  • மகாவிஷ்ணு விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்ய அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் பணி... தஞ்சாவூருக்கு மாற்றப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்சும் சென்னை திரும்புவார் என தகவல்... 
  • சார் பதிவாளரை பணம் கேட்டு மிரட்டிய புகாரில், கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் வராகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்... பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து மாநகர போலீஸார் அதிரடி நடவடிக்கை...
  • நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்... போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் நள்ளிரவில் பரபரப்பு...
  • ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து... தலா 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவிப்பு... 
  • உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வரும் 27ம் தேதி தொடங்குகிறது, 2வது டெஸ்ட் கிரிக்கெட்... ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கான்பூர் சென்றடைந்தது...
Tags:    

மேலும் செய்திகள்