தமிழ்நாடு முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்து கொண்டிருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணை கூட்டு பாலி*யல் பலாத்*கார*ம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமலும் தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.