``அன்று கருணாநிதியே கூறினார்.. ஆனால் இப்போது..'' வானதி சீனிவாசன் கடும் குற்றச்சாட்டு

Update: 2024-08-27 12:30 GMT

அரசு பணிகள் நேரடி நியமன விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தை வலுப்படுத்த அனுபவம் வாய்ந்தவர்களை மத்திய அரசு நியமிக்க முயன்றபோது, சமூகநீதி மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதை தலைமைச் செயலக சங்கம் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, அரசு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்