``ராமரை நீக்க முயன்றால் இந்தியாவே; சனாதத்தை எதிர்த்தவர் இப்போது..'' - அமைச்சரை சீண்டிய ஆளுநர்

Update: 2024-09-14 16:03 GMT

தமிழ்நாட்டில் சனாதத்தை டெங்கு என கூறியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என். ரவி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் "ஸ்ரீராமரும் தமிழகமும் இணைப்பிரியா பந்தம்" என்கிற நூலை வெளியிட்டு பேசிய அவர், ராமர் வடமாநில கடவுள் போன்ற கருத்துக்களால் நமது கலாச்சாரம் இனப்படுகொலை செய்யப்படுவதாக விமர்சித்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது சிவன் இந்திய கடவுள் அல்ல, சோழர் வழிபட்ட கடவுள் என சிலர் கருத்து பரப்பியதாக குறிப்பிட்டார். சனாதனம் டெங்கு, மலேரியா போன்றது என பேசியவர்கள், சில நாட்களில் அமைதியாகிவிட்டதாகவும், தற்போது சனாதனம் குறித்து பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் அமைச்சர் உதயநிதியை மறைமுகமாக சாடினார். ராமரை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது எனவும், ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது என ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்