"ஆட்சியை கலைக்க யோசித்து தான் பாருங்க.." - எல்.முருகன் பேச்சுக்கு உதயநிதி சுளீர் பதிலடி
தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் யோசனை இல்லை என்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் கூற்றுக்கு, யோசித்துத்தான் பார்க்கட்டுமே என அமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.
நெல்லையில், பல்வேறு அரசுப் பணிகளை ஆய்வு செய்த அவர், சீவலப்பேரி பகுதியில் உள்ள நீச்சல்குளம் ஆய்வு செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் யோசனை இல்லை என்று எல்.முருகன் கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, யோசித்துத்தான் பார்க்கட்டுமே என்று பதிலளித்தார்.