"அவர்கள் எப்போதும் எல்லா விஷயத்திலும் விமர்சிப்பர்" மத்திய அமைச்சர் பரபரப்பு புகார்

Update: 2023-10-31 15:42 GMT
  • மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, அவரிடம்,முக்கிய பிரமுகர்களின் ஆப்பிள் ஐபோன்கள் ஹேக் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர்
  • அஸ்வினி வைஷ்ணவ், அரசு இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டிருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட பட்டிருப்பதாக கூறினார்.
  • விவகாரத்தின் ஆணி வேரை கண்டறிவோம் என தெரிவித்தார். நாட்டிலுள்ள சில கட்டாய விமர்சகர்கள் எல்லா விஷயங்களிலும் அரசை விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் நாட்டின் வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை என பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்