இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு15 ஆவது நினைவேந்தல் நிகழ்வு சென்னை பெசன்ட்
நகர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினார்.