"டார்கெட் Fixed" - தென்னிந்தியாவில் அமித்ஷா - சொன்ன கணக்கு

Update: 2024-05-11 13:51 GMT

தெலங்கானாவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்காம் கட்ட தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக கூறினார். இதுவரை நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல்களிலும் 200 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி எட்டிவிட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற அவர், தெலங்கானாவில் பாஜக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாஜக மாறும் என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்