ஆம்ஸ்ட்ராங் படுகொலை - உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

Update: 2024-07-06 15:38 GMT

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்,

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்கின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு தனது ஆறுதல் மற்றும் இரங்கலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்