தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரியில் 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க அரசு முடிவு எடுத்துள்ளது குறித்து செய்திகள் வருவதாக சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இதுபோன்று ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்தால், மத்திய அரசின் நிதி பங்களிப்பு பெருமளவில் குறைந்து, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.