உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படவில்லை. செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யபட்ட மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.