தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக்கூறிய ஓபிஎஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜே. சி. டி பிரபாகர், தங்கள் அணி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின், புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதுகுறித்த ஏற்பாடுகளை பார்வையிட்ட ஜே.சி.டி.பிரபாகார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்தை ஒபிஎஸ் சந்தித்தது ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் மாற்றம் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருமணி நேரம் நீடித்த சந்திப்பில் அரசியலுக்கு பஞ்சம் இருக்காது என அவர் தெரிவித்தார்.